Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

இடஒதுக்கீடு: திருச்சி பெண் நிர்வாகி தீக்குளிப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆதித்தமிழர் பேரவையின் மகளி ரணி மாநிலச்செயலர் ராணி என்ற பழனியம்மாள் (40) தீக்குளித்தார்.

திருச்சி பொன்மலைப்பட்டி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மனைவியான இவர், பொன்மலை கால்நடை மருத்துவமனையில் உதவிப்பாது காப்பாளராக இருந்தார். ஆறுமுகம் திருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகப் பணி யாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளார்.

ஆதித் தமிழர் பேரவையில் மகளிரணி மாநிலச் செயலராக இருந்த ராணி, செவ்வாய்க்கிழமை காலை திருச்சி அரிஸ்டோ ரவுண்டா னாவிலுள்ள அம்பேத்கர் சிலை முன் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அப்போது, அருந்த தியர்களுக்கு 6% உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். திண்டுக்கல் காரியாப்பட்டியில் தொடரும் சாதிக் கொடுமைக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித மலத்தை மனிதர்களே அகற்றுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அருந்ததியர்களுக்காக தீக்குளித்த நீலவேந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று முழக்கமிட்டாராம். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தீயை அணைத்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீக்குளித்த இடத்தில் ராணி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். திருச்சி 6-வது மாவட்ட நீதிமன்ற நீதிபதி திலீப், ராணியின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

ஆர்ப்பாட்டம்

மாவட்டச் செயலர் தில்லை சரவணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி அரசு மருத்துவமனை முன் கூடிய ஆதித் தமிழர் பேரவையினர், ராணியின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x