

சென்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு மண்டல இணை இயக்குநர் அலுவலகம் கிண்டிக்கு மாற்றப்படுகிறது.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலை யில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாளிகை முதல் தளத்தில் செயல்பட்டு வரும் மண்டல இணை இயக்குநர் அலுவலகம் (வேலைவாய்ப்பு) இன்று (புதன்கிழமை) முதல் சென்னை கிண்டி தொழிற்பேட்டை, அரசு பெண்கள் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக கட்டிடத்தின் தரை தளத்துக்கு மாற்றப்படுகிறது.
எனவே, பல்வேறு பணிகள் நிமித்தம் இந்த அலுவலகத்தை தொடர்புகொள்ள விரும்பும் பொதுமக்கள் புதிய முகவரியில் தொடர்புகொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.