கடந்த 4 ஆண்டுகளில் இந்திய பெருங்கடல் பகுதியில் 6 முறை நுழைந்த சீன கப்பல்கள்: கடற்படைத் தலைமை தளபதி சுனில் லம்பா தகவல்

கடந்த 4 ஆண்டுகளில் இந்திய பெருங்கடல் பகுதியில் 6 முறை நுழைந்த சீன கப்பல்கள்: கடற்படைத் தலைமை தளபதி சுனில் லம்பா தகவல்
Updated on
1 min read

இந்திய கடற்படையில் கடந்த 29 ஆண்டுகளாக ‘டியு-142 எம்’ ரக கண்காணிப்பு விமானங்கள் பணியாற்றி வந்தன. பழமையான இந்த விமானங்களுக்கு பதிலாக தற்போது ‘போயிங் பி-8 ஐ’ ரக விமானங்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

எனவே, ‘டியு-142 எம்’ ரக விமானங்களை பணியில் இருந்து விடுவிக்கும் நிகழ்ச்சி அரக் கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுனில் லம்பா கலந்து கொண்டார். ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தின் 25-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சுனில் லம்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திய அமைதி காப்பு படை இலங்கையில் பணியில் ஈடுபட்ட போது ‘டியு - 142 எம்’ ரக விமானங் கள் கண்காணிப்பு பணியில் உதவின. கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு பணிகளில் ஈடுபட்ட ‘டியு-142 எம்’ ரகத்தை சேர்ந்த 8 விமானங்கள் தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

புதிதாக கடற்படையில் இணைக் கப்பட்டுள்ள ‘போயிங் பி-8ஐ’ ரக விமானமானது நவீன ரேடார்கள் மற்றும் ஆயுதங்களை கொண்ட உலகிலேயே சிறந்த விமானம் ஆகும். இதுவரை 8 ‘போயிங் பி-8ஐ’ ரக விமானங்கள் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 4 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இன்னும் சில ஆண்டு களில் அவை பயன்பாட்டுக்கு வரும்.

சீனா தனது நீர்முழ்கிக் கப்பல் களை இந்திய பெருங்கடல் பகுதி யில் 2013-ம் ஆண்டு முதல் செலுத்தி வருகிறது. கடந்த நான்கு ஆண்டு களில் 6 முறை சீன கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்துள்ளன. அவ்வாறு அவர் கள் நுழையும்போது தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று இலங்கை பகுதியில் மீன் பிடிக்கிறார்கள். மீனவர் பிரச்சினை குறித்து இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள், அரசு தரப்புகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெற்றுவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in