

எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்க மாணவர்களின் பெற்றோர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மனு குறித்து பதில் அளிக்க காவல் துறை அவ காசம் கேட்டுள்ளதால், விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டது.
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான ‘வேந்தர்மூவீஸ்’ மதன் கடந்த மே 27-ம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார். அவர் எங்கு இருக்கிறார் என்று இதுவரை தெரிய வில்லை. இதற்கிடையில், அவரும் கூட்டாளிகளும் மருத் துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. 112 பேர் கொடுத்த புகாரின்பேரில் ரூ.75 கோடி மோசடி நடந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் வாங்கிய பணத்தை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் கொடுத்து விட்டதாக கடிதத்தில் மதன் தெரி வித்திருந்தார். இதை யடுத்து, பச்சமுத்து கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. இதை யடுத்து, ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பச்சமுத்துவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று மாணவர்களின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்ஃபன்ட் தினேஷ் கேட்டுக்கொண்டார். பச்ச முத்துவின் ஜாமீன் மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் அளிக்கு மாறு மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சார்பில் ஆஜரான வழக் கறிஞர் எம்.எல்.ஜெகன் கோரினார். இதையடுத்து வழக்கு விசா ரணையை 8-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.