இலங்கை தமிழர்களை காப்பாற்ற
மோடி பிரதமராக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்களை காப்பாற்ற
மோடி பிரதமராக வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:


ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்
அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்
தின் வாயிலாக அந்த விஞ்ஞானி
களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். மோடி பிரதமராக வரவிரும்புகின்றனர். காரணம், தற்போதுள்ள அரசு முற்றி
லும் தோற்றுப்போய் உள்ளது. மாதம் ஒரு ஊழல் என கணக்கிலடங்காத ஊழல், குழு வாக சேர்ந்து ஊழல், இதில் பிரதமர், சிதம்பரம் ஆகியோரும் அடங்குவர். இலங்கை உள்பட அண்டை நாடுகள் இந்தியாவை மதிக்கவில்லை. பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் இலங்கை வழியாக தமிழகத்தில் ஊடுருவ தமிழக மீனவர்கள் தடையாக இருப்பதால் அவர்கள் தாக்கப்படுகிறார்கள்.


இந்திய அரசு எல்லா வகையி லும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. இலங்கை
யில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கக் கூடாது. இந்தியாவை காப்பாற்ற, இலங்கை தமிழர்களை காப்பாற்ற நரேந்திர மோடி பிரதமராக வேண்டும். அதற்கு நீங்கள் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in