

சென்னை பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனையில் கபாலம் - முகச்சீரமைப் புக்காக வாங்கப்பட்டுள்ள அதி நவீன அறுவை சிகிச்சை கருவியின் பயன்பாட்டை செஷல்ஸ் நாட்டு அமைச்சர் ஆலென் செயின்ட் ஆங்கே தொடங்கிவைத்தார்.
சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள பாலாஜி பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவமனை யில் கபாலம் மற்றும் முகச் சீரமைப்பு சிகிச்சைக்காக வாங் கப்பட்டுள்ள ‘கால்வேரியல் புனரமைப்பு கருவி’ மற்றும் ‘கிரேனிடோம்’ என்ற அதிநவீன கருவிகள் பயன்பாடு தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பாலாஜி பல் மற்றும் முகச் சீரமைப்பு மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜி விழாவுக்கு தலைமைத் தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செஷல்ஸ் நாட்டின் சுற்று லாத்துறை அமைச்சர் ஆலென் செயின்ட் ஆங்கே கருவியின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.
அதன்பின் ஆலென் செயின்ட் ஆங்கே செய்தியாளர்களிடம் கூறும்போது, “செஷல்ஸ் நாட்டின் சுற்றுலா, கலாசாரம், மருத்துவ சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்துக்கு வந்துள்ளேன். கடந்த வருடம் 8 ஆயிரத்து 500 இந்தியர்கள் எங்கள் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த வருடம் இதுவரை 4 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.
தற்போது மும்பையில் இருந்து நேரடியாக எங்கள் நாட்டுக்கு விமான சேவை உள்ளது. சென்னையில் இருந்து நேரடியாக வரும் வகையில் விரைவில் விமான சேவைகளை தொடங்க முயற்சி எடுக்கப் படும்.
இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு விசா தேவை யில்லை. ஒரு முறை வந்து செல்வதற்கு தற்போது ரூ.33 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இதனை குறைப்பதற்கு நட வடிக்கை எடுக்கப்படும். தமிழர் கள் உட்பட 5 இன மக்கள் எங்கள் நாட்டில் வசிக்கிறார்கள். இந்தியாவோடு நீண்டகாலமாக நாங்கள் நல்லுறவுடன் இருந்து வருகிறோம். இந்தியா-செஷல்ஸ் இடையே ஒரே மாதிரியான உணவு பழக்க வழக்கங்கள், கலா சாரம் உள்ளது. இதேபோல ஒரே மொழியை பேசுபவர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் இருக்கின்றனர். வணிக ரீதியாக அனைத்து உதவிகளையும் ஏற் படுத்தித் தருவோம். தமிழர்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
4 மணி நேரம் மிச்சம்
டாக்டர் எஸ்.எம்.பாலாஜி கூறும்போது, “கபாலம் - முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்காக ‘கிரேனிடோம்’ என்ற அதிநவீன கருவியை வாங் கியுள்ளோம். இந்த கருவி மூலம் மிகத் துல்லியமாகவும், அதே நேரத்தில் மிக விரைவாகவும் அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும்.
இந்த கருவியின் மூலம் அறுவை சிகிச்சை செய்தால் 4 மணி நேரம் மிச்சமாகும். அதே சமயத்தில் மூளை உள்ளிட்ட உள் உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. மிகவும் குறைவான மருத்துவமனைகளிலேயே இந்த கருவியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.