Published : 16 Sep 2014 17:22 pm

Updated : 16 Sep 2014 18:19 pm

 

Published : 16 Sep 2014 05:22 PM
Last Updated : 16 Sep 2014 06:19 PM

ஐ.எஸ்.ஐ.எஸ். பிடியில் மேலும் 24 பிணைக் கைதிகள் இருக்க வாய்ப்பு

24

இராக்கில் தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் வசம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேர் பிணைக் கைதிகளாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தனி இஸ்லாமிய நாடு அமைக்க இராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், தங்கள் வசம் பிணைய கைதிகளாக இருந்த அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே, ஸ்டீவன் சாட்லாஃப் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த உதவிப் பணியாளர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகியோரை படுகொலை செய்து அதன் வீடியோவை வெளியிட்டது.

இந்த நிலையில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 24 பேரை பிணைக் கைதிகளாக வைத்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை ப்ரான்ஸ், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐ.எஸ் அமைப்பு நிர்ணயித்த பிணைத் தொகையை அந்தந்த நாடுகளின் அரசு செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக 'தி மிர்ரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

இதே போல, 26- வயது மிக்க அமெரிக்க தொழிலாளி ஒருவரும், 20 வயதுடைய 2 இத்தாலி நாட்டவர்களும் கடந்த ஆகஸ்ட் மாதம் அலீபோ நகரில் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ்படுகொலைஇராக்சிரியாமேற்கத்திய நாடுகள் மீது குறி

You May Like

More From This Category

More From this Author