Published : 25 Apr 2017 07:30 AM
Last Updated : 25 Apr 2017 07:30 AM

போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்காக நூலகங்களுக்கு ஆங்கில பருவ இதழ்கள் வாங்க ரூ.2 கோடி: தமிழக அரசு உத்தரவு

போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக நூலகங்களுக்கு ஆங்கில பருவ இதழ்கள் வாங்க ரூ.2 கோடி அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் த.உதயசந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்ப தாவது:

தமிழகத்தில் பொது நூலக இயக்ககத்தின் கீழ் சென்னை எழும்பூர் கன்னிமாரா நூலகம், கோட்டூர்புரம் அண்ணா நூற் றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1926 கிளை நூலகங்கள், 1914 ஊர்ப்புற நூலகங் கள், 14 நடமாடும் நூலகங்கள், 716 பகுதிநேர நூலகங்கள் என மொத்தம் 4,603 நூலகங்கள் இயங்குகின்றன. பொது நூலக இயக்ககத்தின் நூல் தேர்வுக்குழு உறுப்பினர்களால் 391 தமிழ் பருவ இதழ்கள், 140 ஆங்கில பருவ இதழ்கள் தேர்வுசெய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த பட்டிய லில் உள்ள நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களில் அந்தந்த மாவட்ட வாசகர்களால் அதிகளவில் பயன் படுத்தப்படும் இதழ்கள் தேவைக் கேற்ப மாவட்ட நூலக ஆணையக் குழுவின் நிதிநிலைக்கு ஏற்ப நூல கங்களுக்கு வாங்கப்படுகின்றன.

தமிழக மாணவ, மாணவிகள், படித்த இளைஞர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கன்னிமாரா நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், மாவட்ட தலைநகர், நகராட்சி மற்றும் சிறிய நகரங்களில் அமைந்துள்ள 273 நூலகங்களில் குடிமைப்பணி கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த மையங்களில் தேசிய மற்றும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளை (யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே வாரியம், வங்கி தேர்வு வாரியம், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் போன்றவை) எழுதும் இளைஞர்களின் நலனை முன்னிட்டு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், தினசரிகள், பருவ இதழ்கள் வழங்கப்படுகின்றன. மேலும், படித்த இளைஞர்கள் பயன்பெறும் வண்ணம் கோவை, கரூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய 6 மாவட்ட மைய நூலகங்களில் உள்ள குடிமைப்பணிப் பிரிவில் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், குடிமைப்பணி தேர்வு மூலம் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் அனைத்து மாவட்ட நூலகங்களில் செயல்படும் குடிமைப்பணி கல்வி மையங்களுக்கு வரும் இளைஞர்களை போட்டித்தேர்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் மாவட்ட மைய நூலகங்களுக்கு தலா 61 பருவ இதழ்கள் வாங்கவும், 241 முழுநேர நூலகங்களுக்கு தலா 34 பருவ இதழ்கள் வாங்கவும், 320 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்கள் வாங்கவும், பொது நூலக இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது கருத்து அரசால் பரிசீலிக்கப்பட்டு அதன்படி, 32 மாவட்ட நூலகங்களுக்கு தலா 61 ஆங்கில பருவ இதழ்கள், 241 முழுநேர நூலகங்களுக்கு தலா 34 ஆங்கில பருவ இதழ்கள், 320 கிளை நூலகங்களுக்கு தலா 19 ஆங்கில பருவ இதழ்கள் வாங்கவும் அதற்கான ஆண்டுச்செலவினம் ரூ.2 கோடியே 35 ஆயிரத்தை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதியில் இருந்து மேற்கொள்ளவும் அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x