Published : 20 Apr 2017 08:24 AM
Last Updated : 20 Apr 2017 08:24 AM

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சிக்காக சராசரி மாணவர்களை பெயிலாக்கும் தனியார் பள்ளிகள்: புகார் வந்தால் கடும் நடவடிக்கை: பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் நோக்கில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்களை பெயி லாக்கிவிடுவதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் எழுந் துள்ளன. இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும், தங்கள் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாநில அளவில் ரேங்க் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பள்ளிகளின் இயல்பு. இது தனியார் பள்ளிகளுக்கு மட்டுமின்றி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றுக்கும் பொருந்தும். 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு அதாவது 10, 12-ம் வகுப்புக்குச் செல்ல அனுமதித்தால் பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்பதற்காக சில தனியார் பள்ளிகள் அத்தகைய மாணவர்களை 9, 11-ம் வகுப்பிலேயே வடிகட்டிவிடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப் பப்பட்டு வருகின்றன. இன்னும் சில பள்ளிகள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு செல்ல அனுமதித் தாலும் சராசரி மாணவர்களை தனித்தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் சம்பவங்களும் ஆங் காங்கே நிகழாமல் இல்லை. கடந்த ஆண்டு தென்மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் இதுபோன்று அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வு எழுத வைக்க முயற்சி நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் தனியார் சுயநிதி பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்தான் நிகழ்கின்றன. அரசுப் பள்ளிகள் மீது இதுபோன்ற புகார்கள் எழுவதில்லை.

இந்நிலையில், சென்னையில் இந்த ஆண்டு சில தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சுமாராக படித்த மாணவ, மாணவிகள் பெயிலாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 60-க்கும் மேற்பட்டோர் இதுபோன்று பெயிலாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தகுந்த காரணம் இல்லாமல் எந்த மாணவரையும் 9-ம் வகுப்பிலும், 11-ம் வகுப்பிலும் பெயலாக்கக் கூடாது. 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்று 9-ம் வகுப்பிலோ, 11-ம் வகுப்பிலோ, சுமாராக படிக்கும் மாணவர்களை பெயிலாக்குவது தவறு. இதுதொடர்பாக குறிப்பிட்ட பள்ளியின் மீது புகார் வரப்பெற்றால் அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒருசில மாணவர்கள் வகுப்புக்கு சரிவர சென்றிருக்க மாட்டார்கள். வருகைப் பதிவு மிகவும் குறைவாக இருக்கும். தேர்வு எழுதியிருக்க மாட்டார்கள். அதுபோன்ற மாணவர்களை பெயிலாக்கினால் ஒன்றும் செய்ய இயலாது. மாணவர்கள் உரிய காரணம் இன்றி பெயிலாக்கப்பட்டிருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். தகுந்த காரணம் இல்லாமல் பெயிலாக்கப்பட்டிருப்பதாக மாண வர்களோ, பெற்றோரோ உணர்ந் தால் அந்த பள்ளி தனியார் பள்ளி யாக இருப்பின் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளரிடம் (ஐ.எம்.எஸ்.) அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் (சி.இ.ஓ.) புகார் செய்யலாம். அந்த புகார்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x