

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போராடுகின்றனர். விவசாய உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்காத தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன், ‘விவசாயிகள் அனைவரும் வள மாக வாழ்கின்றனர். விளம்பரத் துக்காகவே சட்டையை கழற்றி போடுகிறார்கள். நிலமில்லாதவர் கள் சாலையில் இறங்கி போராடு கிறார்கள்’ என கூறியுள்ளது, அவரது முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது. இந்த பேச்சுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாட்டுக்காக உழைக்கும் விவசாயி சாலையில் இறங்கி போராடுவதை பாராட்டாவிட்டா லும், இது போன்று பேசலாமா? அவர் தனது பேச்சை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அவரது பேச்சைக் கண் டித்து போராட்டம் நடத்தப்படும் .