கருணாநிதி 2-வது முறையாக களமிறங்கும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவாரூர்

கருணாநிதி 2-வது முறையாக களமிறங்கும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருவாரூர்
Updated on
1 min read

தமிழத்தில் உள்ள விவசாயம் நிறைந்த, முப்போகமும் சாகுபடி செய்யப்பட்ட மாவட்டம் தான் திருவாரூர் மாவட்டம். ஆன்மிகமும், விவசாயமும் ஒன்று சேர செழித்து வளர்ந்த பூமியாகும்.

தனித் தொகுதியாக இருந்த திருவாரூர், கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு பொதுத் தொகுதியாக மாறியது. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக் குள் திருவாரூர் பேரவைத் தொகுதி அடங்கியுள்ளது. திருவாரூர் தொகுதி யின் பிரதான தொழில் விவசாயம். விவசாயிகளும், விவசாயத் தொழிலா ளர்களும் அதிகம் நிறைந்த தொகுதி.

மும்மூர்த்திகள்

திருவாரூர், திராவிட இயக்கம் ஆழமாக வேரூன்றிய பகுதியாகும். தமிழக அரசியலில் கடந்த 75 ஆண்டு களாக அசைக்க முடியாத சக்தியாக இருக்கும் திமுக தலைவர் கருணா நிதி தனது அரசியல் வாழ்வை திருவாரூர் தெருக்களில் இருந்துதான் தொடங்கினார். திருவாரூர் தனி மாவட்டமானதும் திமுக ஆட்சியில்தான். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அவர்களை குறிவைத்தே அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி யில் 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 1967-ல் மார்க்சிஸ்ட் கட்சியும், 1971,1977-ல் திமுகவும், 1980, 1984,1989,1991 ஆகிய நான்கு தேர்தல்களில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வெற்றி பெற்றது. 1996, 2001, 2006, 2011 ஆகிய பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

பொதுத் தொகுதியாக மாறிய பிறகு முதல்முறையாக கடந்த 2011-ல் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் எம்.ராஜேந்திரனைவிட 50 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பலமுனைப் போட்டி

இந்தத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் மீண்டும் கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் (அதிமுக), பி.எஸ்.மாசிலாமணி (இந்திய கம்யூ னிஸ்ட்), ரங்கதாஸ் (பாஜக), சிவக்குமார் (பாமக), தென்றல் சந்திர சேகர் (நாம் தமிழர் கட்சி) ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.

தேவைகள் என்ன?

திருவாரூரைச் சுற்றி புறவழிச் சாலை அமைக்க வேண்டும். காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியாக இருப்பதால் பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். ஓஎன்ஜிசி மற்றும் ஷேல் கேஸ் நிறுவனங்களை இங்கிருந்து வெளி யேற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர். கடந்த ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருவாரூர் தொகுதியில் 1,25,424 ஆண்களும், 1,27,029 பெண் களும், 13 திருநங்கையரும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in