

தமிழகத்தில் மதுபானக் கடை களை மூட பெண்களைத் திரட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாமக எம்பி அன்புமணி நன்றி அறிவிப்பு கூட்டத்தில் மக்களிடம் பேசினார்.
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட் பாளராக போட்டியிட்டு அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார். இதனை முன்னிட்டு, மேச்சேரி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓமலூரான் தெரு, நெசவாளர் காலனி, சாம்ராஜ் பேட்டை உட்பட பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும், பாமக கொடியேற்றி வைத்தும் பாமக அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:
“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எனது வெற்றிக்கு காரணம் பொதுமக்கள் தான். உங்கள் பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வர பாடுபடு வேன். உள்ளூரில் உள்ள படித்த இளைஞர்களுக்கு தொழிற்சாலை களில் வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
என்னை தேர்ந்தெடுத்து மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் அரசு மதுபானக் கடை முற்றிலும் மூடப்படும் என்று கூறியிருந்தேன். எனவே, பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழகம் முழுவதும் பெண்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும். தமிழகத்தில் அதிமுக - திமுக கட்சிக்கு மாற்றாக மாற்றம் வேண் டும். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாமக ஆட்சி அமைக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட பொறுப் பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.