

சட்டப்பேரவையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தராமல், பேரவைக்கு வருமாறு அவருக்கு சவால் விடு வதா என்று முதல்வர் ஜெயலலிதா வுக்கு மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திமுக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை தேனாம் பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலங் களவை திமுக குழுத் தலைவரும், அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மகளிரணி நிர்வாகிகள் காஞ்சனா கமலநாதன், விஜயா தாயன்பன், கவிஞர் சல்மா, நூர்ஜஹான் பேகம், ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் களிடம் கனிமொழி கூறியதாவது:
எதிர்க்கட்சிகளே இல்லாமல் காவல் துறை மானியக் கோரிக்கை யின் மீது விவாதம் நடந்து முதல்வர் ஜெயலலிதா பேசியுள் ளார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை வைத்துக் கொண்டு பேச முதல்வருக்கு தைரியம் இல்லை. அத னால்தான் திட்டமிட்டு திமுக எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்துள்ளனர்.
காவல் துறை மானியக் கோரிக் கையின்போது பேசிய முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி ஏன் பேரவைக்கு வரவில்லை. 2006-ல் நான் தனியாக வந்து சட்டப்பேரவையில் பேசினேன். அந்த துணிச்சல் ஏன் அவருக்கு இல்லை என சவால் விடுத்துள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங் கேற்கும் வகையில் கருணாநிதிக்கு இருக்கை வசதி செய்து தராமல் சவால் விடுவது கண்டனத்துக்கு உரியது. திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு சவால் விடுவதில் அர்த்தம் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத் தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள் ளது. திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இன்னும் குற்றவாளிகள் கண் டறியப்படவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த பல தவறுகள், பிரச்சினைகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பதில் சொல்வதே இல்லை.
இவ்வாறு கனிமொழி கூறினார்.