

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் ‘தானபெக்ஸ்-2017’ என்ற அஞ்சல் தலை கண்காட்சி சென் னையில் நாளை தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் டாக்டர் சார்லஸ் லோபோ சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் ‘தானபெக்ஸ் - 2017’ என்ற பெயரில் அஞ்சல் தலைக் கண்காட்சி ஷெனாய் நகர் அம்மா அரங்கம் சமுதாயக் கூடத்தில் 5-ம் தேதி (நாளை) தொடங் குகிறது. 4 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இது மாநில அளவிலான 11-வது அஞ்சல் தலைக் கண்காட்சியாகும்.
கண்காட்சியை ஒட்டி மாண வர்களுக்கு விநாடி வினா போட்டிகள் நடத்தப்படும். இதில், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் இளநிலை பிரிவிலும், 15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு முதுநிலைப் பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங் கள் மற்றும் சான்றிதழ்கள் வழங் கப்படும். மேலும் அஞ்சல்தலை வடிவமைப்பு ஓவியப்போட்டி, அஞ்சல்தலை சேகரிப்பு பணி மனை, கருத்தரங்கம், ‘பிலா ஹன்ட்’ என்ற அஞ்சல்தலை தேடல், ‘பிலா வாக்’ என்ற அஞ்சல் நடையோட்டம், ‘கோன் பனேகா ஸ்டாம்ப் பதி’ என்ற அஞ்சல்தலை சேகரிப்பு வெற்றியாளர் யார் என்ற நிகழ்ச்சி, மாயாஜால காட்சி கள், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட வையும் நடைபெற உள்ளன.
கண்காட்சியில் மறைந்த திரைப்பட நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச் சந்திரன், நடிகை டி.பி.ராஜலஷ்மி, தயாரிப்பாளர் வின்சென்ட் சாமிக் கண்ணு ஆகியோரின் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியிடப் பட உள்ளன. அத்துடன், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ் வரர் கோவில், திருவாரூர் கோவில் தேர் ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் உறைகளும் வெளி யிடப்பட உள்ளன என்றார்.
இச்சந்திப்போது சென்னை நகர மண்டல தலைமை அஞ்சல்துறை தலைவர் பி.ராதிகா சக்ரவர்த்தி உடன் இருந்தார்.