சசிகலா குடும்பத்தை ஒதுக்கும் முடிவு விவேகமானதே: சசிகலாவின் தம்பி மகன்

சசிகலா குடும்பத்தை ஒதுக்கும் முடிவு விவேகமானதே: சசிகலாவின் தம்பி மகன்
Updated on
1 min read

சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற அமைச்சர்களின் முடிவு விவேகமானதே என்று சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக (அம்மா) அணியில் அமைச்சர்கள் அனைவரும், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிகலாவின் தம்பி மகன் ஜெயானந்த், ''கழகத்தில் சசிகலாவைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது. சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு சரியானதே. இதை நாங்கள் சில மாதங்களுக்கு முன்பே கூறினோம்.

இது தாமதமான முடிவுதான். ஆனால் விவேகமானது'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in