

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொது வாக மேகமூட்டத்துடன் காணப் படும். மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒரு சில இடங்களில் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 95 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலையாக 82.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கக் கூடும்.
தமிழகத்தில் வெப்ப நிலையை பொறுத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 96.44 டிகிரி ஃபாரன்ஹீட், கடலூரில் 95.72 டிகிரி ஃபாரன்ஹீட், நாகப்பட்டினத்தில் 95.54 டிகிரி ஃபாரன்ஹீட், பட்டுக் கோட்டையில் 94.1 டிகிரி ஃபாரன்ஹீட், வேலூர் மற்றும் சேலத்தில் 93.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதி வாகியுள்ளது.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.