Published : 15 Jul 2016 09:39 AM
Last Updated : 15 Jul 2016 09:39 AM

தமிழக பழங்குடி கிராமங்களில் மாவோயிஸ்ட்கள்?- தேடுதல் வேட்டையில் அதிரடிப் படை

கோவை மாவட்டத்தில், தமிழகத் தின் எல்லையாக உள்ள ஆனை கட்டியை அடுத்து உள்ளது கேரளத் தின் அட்டப்பாடி பழங்குடியினர் கிராமங்கள். அட்டப்பாடி வனப்ப குதியில் மாவோயிஸ்ட் தாக்குதல் சம்பவங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. அண்மைக் காலமாக தமிழகம் மற்றும் கேரள எல்லையோர மலை கிராமங்க ளுக்கு வரும் மாவோயிஸ்ட்கள், இரு மாநில அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெ டுக்க பழங்குடி மக்களிடம் வலியு றுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக, தீவிரவா தி களை எதிர்கொள்வது குறித்து அதிரடிப்படையினர் இப்பகுதி போலீஸாருக்கு பயிற்சி அளித்தனர்.

கடந்த ஒரு வாரமாக இப்ப குதிகளில் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாகவும், இவர் கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதனையடுத்து, தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. பில்லூர் அணைப் பகுதியைச் சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேரள வனப்பகுதியை ஒட்டி யுள்ள முள்ளி வனப்பகுதி மலை கிராமத்தில் அதிநவீன ஆயுதங் களுடன் 60-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் முகா மிட்டுள்ளனர். 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து அடர்ந்த காட்டுக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளப் பகுதியில் இருந்து பில்லூர் அணை வழியாக தமி ழகத் துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைகளுக்கு பின்பே அனு மதிக்கப்படுகின்றன. தேடப்படும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங் கள் சோதனைச் சாவடிகளில் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்படு கிறது.

கண்காணிப்பு போலீஸார் கூறும் போது, ‘‘2 நாட் களுக்கு முன்பு தமிழ், மலையா ளத்தில் அச்சடிக்கப் பட்ட நோட்டீஸ் ஒன்று மர்ம நபர்களால் தமிழக பழங்குடியி னர் கிராமங்களில் விநியோகிக் கப்பட்டுள் ளது. அதன் காரண மாகவே வாகனங்கள் சோதனைக்கு உட்படுத் தப்படுகின்றன” என்றனர்.

கேமராக்கள் இல்லை

கேரளத்தின் அட்டப்பாடி வனத்தை ஒட்டியுள்ள வாளை யாறு, ஆனைகட்டி, மாங்கரை, முள்ளி, பில்லூர், கோபனாரி, வெள்ளியங்காடு போன்ற பகுதி களில் தமிழக வனத்துறை சோத னைச் சாவடிகள் அமைந்துள்ளன. வாளையாறு, மாங்கரை போன்ற சில இடங்களில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடிகளில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனத்துறை சோதனைச் சாவடிகளில் ஆயுதம் தாங்கிய போலீஸார் கண்காணிப் புப் பணியில் ஈடுபடுகின்றனர், கேம ராக்கள் பொருத்தப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x