Published : 14 Jun 2017 09:48 AM
Last Updated : 14 Jun 2017 09:48 AM

அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ்: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்

அங்கன்வாடி மையங்களில் 5 வயது நிறைவு செய்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தை களுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவை யான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல் படுத்தப்படுகின்றன.

ஆடிப்பாடி விளையாடு பாப்பா

தேசிய ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை அடிப்படையில் அங்கன் வாடி மையங்களில் பயின்று வரும் 2 முதல் 5 வயது வரை யிலான குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி பாடத் திட்டத்தில் ‘ஆடிப்பாடி விளையாடு பாப்பா’ என்ற புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத் திட்டத்தை செயல் படுத்த முன்பருவ கல்வி உபகர ணங்கள், பாடத்திட்ட புத்தகங்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டு புத்தகங்கள் மற்றும் ஆய்வுத் தாள்கள் ஆகியவற்றுக்கு ரூ. 15 கோடியே 59 லட்சம் செலவிடப் படுகிறது. இந்த வகையில் அங்கன்வாடி மையங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன.

7 குழந்தைகளுக்கு சான்றிதழ்

கடந்த 2016-17 சமூக நலத்துறை மானிய கோரிக்கையில் இந்த நிதியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன் பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் புதிய முறை அறிமுகப் படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

இதை செயல்படுத்தும் விதமாக, கடந்த 2016-17-ம் கல்வியாண்டில் 5 வயது நிறைவடைந்து தொடக்க கல்வி பயிலச் செல்லும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 73 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை நேற்று முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 7 குழந்தைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இச்சான்றிதழ்களை வழங்கு வதன் மூலம் அங்கன்வாடி மையங் கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்பட்டுள் ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் வி.சரோஜா, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநர் ஆர்.கண்ணன், இணை இயக்குநர் ஜோ.ம.யமுனாராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x