

காஞ்சிபுரம் அடுத்த ஈஞ்சம்பாக்கத் தில் ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில், பாடம் நடத்த ஆசிரியர் இல்லை எனக்கூறி அப்பள்ளியின் மாணவர்கள் அரக்கோணம் சாலையில் வெள்ளிக்கிழமை மறி யலில் ஈடுபட்டனர்.
ஆதிதிராவிட பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் கள், தங்களுக்கு பாடம் நடத்த பள்ளியில் ஆசிரியர்கள் இல்லை எனக்கூறி, காஞ்சிபுரம், அரக்
கோணம் செல்லும் நெடுஞ் சாலையில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸார் அங்கு விரைந்து சென்று, பள்ளி மாணவர்களை சமாதானப்படுத்தி அவர்களை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மனோகரன், மாணவர்களைச் சந்தித்து பள்ளிக்கு புதிய கணக்கு வாத்தியார் நியமிக்கப்பட் டுள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். ஆசிரியர்கள் தினத்தன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் மனோகரன் கூறியதாவது, “ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளி யில், ஆதிதிராவிட அமைச்சரின் உத்தரவின்பேரில், பள்ளியின் தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதனால், மாணவர்கள் தங்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை என சாலை மறியலில் ஈடுபட் டுள்ளனர். விரைவில் அனைத்து பணியிடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளோம்” என்றார்.