25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு

25 சதவீத இடஒதுக்கீடு: தனியார் பள்ளி காலியிடங்களில் நவ.30 வரை மாணவர் சேர்க்கை - மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவிப்பு
Updated on
1 min read

கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம் என்று மெட்ரிக் பள்ளி இயக்ககம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளி களில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

இதற்கான கல்விக் கட்டணச் செலவை (அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்) பள்ளி நிர்வாகத்துக்கு அரசு வழங்கிவிடும். கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் காலியிடங்களை நவம்பர் 30-ம் தேதி வரை நிரப்பிக்கொள்ளலாம். நடப்பு கல்வி ஆண்டில் (2016-2017) 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி ஜுன் 30-ம் தேதி முடிவடைந்தது.

காலியிடங்கள்

தற்போது அந்த இடஒதுக் கீட்டில் உள்ள இடங்களில் காலியிடங்கள் இருந்தால் அவற்றில் நவம்பர் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள லாம்.

இதுதொடர்பாக மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப் பட்டிருப்பதாக மெட்ரிக் பள்ளி இயக்கக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in