

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவிலும், தமிழக அரசியலிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, விவசாயிகள் போராட்டம், வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றுக்காக போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.