

விசாரணைக் கைதி தப்பி ஓடிய தால் குடியாத்தம் கிளைச் சிறை கண்காணிப்பாளர் உட்பட 2 பேர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொசவன்புதூர் கிராமத் தைச் சேர்ந்தவர் சரத்குமார்(24). குடும்பப் பிரச்சினை தொடர்பாக இவரது மனைவி அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, சரத்குமாரை கைது செய்து குடியாத்தம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
நேற்று முன்தினம் மாலை குடியாத்தம் கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளின் வருகைப் பதிவேட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சரத்குமார் அங்கு இல்லை. சிறையின் 15 அடி உயர சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பிச் சென் றது தெரியவந்தது. இது தொடர் பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை தேடி வருகின் றனர்.
வேலூர் மத்திய சிறை கண் காணிப்பாளர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தினார். இது தொடர்பாக, அவர் கூறும்போது, ‘‘கிளைச் சிறையில் விசாரணைக் கைதி தப்பிய சம்பவம் தொடர்பாக கிளைச் சிறை கண்காணிப்பாளர் சிவராஜன் மற்றும் முதல் தலைமை வார்டர் கோபிநாத் சிவராஜன் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தப்பி ஓடிய சரத்குமாரை பிடிக்க சிறைக் காவலர்கள் அடங்கிய 3 தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்’’ என்றார்.