Published : 22 Sep 2014 08:37 AM
Last Updated : 22 Sep 2014 08:37 AM

உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?- சில மணி நேரத்தில் முடிவு தெரியும்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடிவு தெரிந்துவிடும்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை மாநகராட்சி மேயர்கள், அரக்கோணம், கொடைக்கானல், சங்கரன்கோவில் உட்பட 8 நகராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டுகள் என காலியாக உள்ள 2,130 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில், நெல்லை மேயர் மற்றும் சங்கரன் கோவில், குன்னூர், புதுக்கோட்டை, கொடைக்கானல் ஆகிய 4 நக ராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 1,500-க்கும் அதிகமான பதவி களுக்கு அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். செங்கல்பட்டில் 2 நக ராட்சி வார்டுகள் உட்பட சில வார்டு களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

எஞ்சியுள்ள தூத்துக்குடி, கோவை மேயர்கள் உட்பட 530 பதவிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. இதனால், அதிமுக பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது. சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போட்டியிட்டனர்.

ஊரக உள்ளாட்சிகளில் 67.99 சதவீதம், நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிகளில் 63.57 சதவீதம் வாக்குகள் பதி வாயின. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள் மற்றும் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டன. அந்த மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகியது. வாக்குகள் எண்ணத் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்திலேயே முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர் பாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் அமைக்கப்பட் டுள்ள 307 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கும். அனைத்து மையங்களுக்கும் மூன்றடுக்கு பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அதிகாரப்பூர்வ முகவர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையைக் கொண்டுவரும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவிதங்களை தவிர்க்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின்போது நடத்தை விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், டிஜிபி, டிஐஜி-க்கள், மாநகர காவல்துறை ஆணையர்கள், எஸ்.பி.க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடக்கும் பகுதிகளில் இன்று டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியேயும் போலீஸார் கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x