மீத்தேன் திட்ட விவகாரம்: மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

மீத்தேன் திட்ட விவகாரம்: மத்திய பெட்ரோலிய அமைச்சருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

மீத்தேன் திட்டத்தை செயல் ப டுத்துவோம் என்று தெரிவித்த, மத்திய பெட்ரோலிய அமைச் சர் தர்மேந்திர பிரதானுக்கு அனைத்து விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இயற்கை எரிவாயு பணியால், குடிநீர் ஆதாரம் முற்றிலும் அழிந்து, மண் வளம் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வா கம் சார்பில் எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று, நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள் ளனர். இத்திட்டங்களை எதிர்த்து அனைத்து கிராம மக்க ளும் போராடி வருகின்றனர். இதேபோல, மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும் போராடி வருகிறோம்.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மீத்தேன் திட்டம் முழு மையாகக் கைவிடப்பட்டுவிட்டது என்று மத்திய அரசு உறுதியளித் துள்ளது. தமிழகத்தில் இத்திட் டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக அரசும் தெரிவித் துள்ளது. இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில், இந்த வழக்கை முடித்து வைப்பதாக கடந்த மே 6-ம் தேதி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் பத்திரிகை யாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது, மத்திய அமைச்சரவையின் ஒற்றுமையின் மையை வெளிப்படுத்துவதாக வும், உயர் நீதிமன்றத்தை அவ மதிப்பதாகவும் உள்ளது.

எனவே, மீத்தேன் திட்ட விவகாரத்தில், பிரமதர் மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதா வும், தங்களது முடிவை தெளி வுபடுத்த வேண்டும்.

மேலும், காவிரி டெல்டாவை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in