சொத்து வாங்கியது தொடர்பான புகார்: ராமதாஸ் மகளிடம் விசாரணை

சொத்து வாங்கியது தொடர்பான புகார்: ராமதாஸ் மகளிடம் விசாரணை
Updated on
1 min read

திண்டிவனம் அருகே நிலம் வாங்கிய விவகாரத்தில் டாக்டர் ராமதாஸின் மகளிடம் டிஎஸ்பி நேற்று விசாரணை நடத்தினார்.

திண்டிவனம் அருகே கோனேரிகுப்பத்தைச் சேர்ந்த கோனேரியின் மனைவி ஆனந்தாயி (58). இவரது சகோதரிகள் தாந் தோணியம்மாள், சின்னகுழந் தை, இருசம்மாள், லட்சுமி ஆகியோருக்கு கோனேரிக்குப் பத்தில் சுமார் 1.90 சென்ட் நிலம் உள்ளது.

இதில் லட்சுமி, தனது பாகத்தையும் சேர்த்து விற்பனை செய்துவிட்டதாக கடந்த 2015 நவம்பர் மாதம் விழுப்புரம் நில அபகரிப்பு போலீஸாரிடம், ஆனந்தாயி புகார் மனு அளித்தார்.

இதுதொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத தால், சென்னை உயர்நீதிமன் றத்தில் கடந்த 9-ம் தேதி ஆனந்தாயி மனுத்தாக்கல் செய்தார். அவரது புகார் மீது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு போலீஸாருக்கு உயர்நீதி மன்றம் உத்தர விட்டது.

அவகாசம் கேட்டு மனு தாக்கல்

இதையடுத்து நிலத்தை வாங்கிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகள்  காந்தியிடம், டிஎஸ்பி சிவாஜி அருள்செல்வன் நேற்று முன் தினம் விசாரணை மேற் கொண்டார்.

புகார் அளித்த ஆனந்தாயியும் விசாரணைக்கு ஆஜரானார். விசாரணையின் போது ஆனந்தாயி, தன் தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்க ஒரு வார காலம் அவகாசம் கேட்டு மனு அளித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in