கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை: 7 மாணவர்களுக்கு ரூ.1.40 லட்சம் முதல்வர் காசோலை வழங்கினார்

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சாதனை: 7 மாணவர்களுக்கு ரூ.1.40 லட்சம் முதல்வர் காசோலை வழங்கினார்

Published on

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சென்னை மாவட்ட மாணவ, மாணவிகள் 7 பேருக்கு ரூ.1.40 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றி தழ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மற்ற மாவட்ட மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் இவை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து மாணவ, மாணவி களும் கல்வியில் சிறந்து விளங்க வும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையவும், கல்வி கற்க வறுமை தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கிலும் கட்டண மில்லா கல்வி, பேருந்து பயண அட்டைகள், சைக்கிள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, கல்வி உபகரணப் பொருட்கள், காலணி கள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகை போன்ற பல் வேறு ஆக்கபூர்வமான திட்டங் களை ஜெயலலிதா தலைமையி லான அரசு சீரிய முறையில் செயல் படுத்தி வந்தது. அவரது வழியில் செயல்படும் தமிழக அரசு இத்திட் டங்களை தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

பள்ளிக்கல்வி, சமூக நலம், சத்துணவு, ஆதிதிராவிடர், பழங் குடியினர் நலம், வனம், பிற்படுத் தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மையினர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகிய துறைகளால் பல பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் கடந்த 2015-16 கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழை ஒரு மொழி பாடமாகக் கொண்டு படித்து மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த 21 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த 22 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்த 69 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம், 3-ம் இடம் பிடித்த 424 பேருக்கு தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலைகள் தமிழக அரசால் வழங்கப்படும்.

இதில் தற்போது, சென்னை மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் 3-ம் தேதி (நேற்று) வழங்கினார்.

இதில், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சத் துணவு அமைச்சர் வி.சரோஜா, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் நல அமைச்சர் எஸ்.வளர்மதி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபிதா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலாளர் முகமது நஜிமுதீன், சமூகநலம், சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலாளர் ஏ.கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மற்ற மாவட்ட மாணவ, மாணவி களுக்கு அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் காசோலைகள், பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வழங்கு வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in