Published : 10 Jan 2017 10:10 AM
Last Updated : 10 Jan 2017 10:10 AM

திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்பு மரகத லிங்கம் திருட்டு

வேட்டவலம் மனோன்மணி அம்மன் கோயிலில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகரம் ஜமீன் வளாகத் தில் இருக்கும் மலை மீது மனோன் மணி அம்மன் கோயில் உள்ளது. கோயில் பராமரிப்பு மற்றும் திரு விழாக்களை ஜமீன் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். காலை மற்றும் மாலை வேளைகளில் குருக்கள் சண்முகம் பூஜையை செய்து வருகிறார். இவர், கோயிலில் பூஜை செய்வதற்காக வழக்கம்போல் நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்றார். கோயில் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது, கிழக்கு வாசல் கதவு திறந்து இருந்தது. கோயில் சுவர் துளையிடப்பட்டு இருந்தது. கருவறையில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தன.

தகவல் அறிந்த ஜமீன்தார் மகேந் திர பந்தாரியார், வேட்டவலம் காவல்நிலையத்தில் புகார் அளித் தார். அதன்பேரில், வேட்டவலம் காவல் நிலைய ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். கோயில் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம கும்பல், கோயில் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 5 அங்குல உயரம் உள்ள மரகத லிங்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும், ஒரு கிலோ எடை உள்ள அம்மனின் வெள்ளி கிரீடம், வெள்ளி பாதம், ஒட்டியானம், மரகதலிங்கம் வைக்க பயன்படுத்தப்படும் வெள்ளி நாகபரணம் மற்றும் 4 கிராம் தங்கத் தாலி ஆகியவற்றையும் காணவில்லை. இதனையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தி னர். வேலூர் சரக டிஐஜி கூறும் போது, ‘‘கூடுதல் காவல் கண்காணிப் பாளர் ரங்கராஜன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மரகதலிங்கத்தை திருடிச் சென்ற வர்களைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x