

பழநி தண்டாயுதபாணி கோயி லுக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக திண்டுக்கல் முதல் பழநி வரை தனி பாதை அமைக்க வேண்டும் என திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) கோரிக்கைவிடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ஒட்டன் சத்திரம், சத்திரப்பட்டி புறவழிச் சாலை அமைப்பது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு அறிவிப்பை கொண்டு வந்து அவர் பேசிய தாவது:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் நகரின் நடுவில் தமிழகத் தின் மிகப்பெரிய காய்கறிச் சந்தை யும், பால் பொருள்கள் சந்தையும் உள்ளன. இதனால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன.
திருப்பூரில் இருந்து பின்ன லாடைகளை ஏற்றிவரும் கன்டெய் னர் லாரிகள் ஒட்டன்சத்திரம் வழியா கவே தூத்துக்குடி துறைமுகத் துக்கு செல்கின்றன. இதனால் ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுபோல சத்திரப்பட்டியிலும் போக்குவரத்து நெரிசல் அதிக மாக உள்ளது. எனவே, ஓட்டன் சத்திரம், சத்திரப்பட்டியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும். தைப் பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல்லில் இருந்து பழநி தண்டாயுதபாணி கோயி லுக்கு பாதயாத்திரை செல்கின்ற னர். இதனால் சுமார் 15 நாள்களுக்கு இந்தச் சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே, முன்னுரிமை அடிப்படையில் திண்டுக்கல் முதல் பழநி வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும். பழநிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக 5 மீட்டர் தனி பாதை அமைக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை அமைச் சரின் எடப்பாடி தொகுதியில் இருந்துதான் அதிகமானோர் பாதயாத்திரை வருகின்றனர். எடப்பாடியில் இருந்துதான் பழநிக்கு பெரிய காவடிகள் வருகின்றன. எனவே, தனிப்பாதை அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சக்கரபாணி பேசினார்.
நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழநிச்சாமி:
தேசிய நெடுஞ்சாலை 209 ஒட்டன்சத்திரம் நகரில் லக்கியான்கோட்டை முதல் அங்கப்பிள்ளைபட்டி வரை புற வழிச்சாலை அமைக்க ரூ.16 கோடியே 77 லட்சத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு கடந்த 31-3-2008-ல் மத்திய அரசு அனுமதி அளித்தது. நிலத்தின் மதிப்பு உயர்ந்ததால் திருத்திய நில எடுப்பு மதிப்பீடு ரூ.30 கோடியே 62 லட்சத்துக்கு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
ரூ.28 கோடியே 55 லட்சம் உரிய நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த புறவழிச்சாலை பணிக்கான மதிப்பீடு ரூ.235 கோடியே 91 லட்சத்துக்கு மத்திய அரசின் அனுமதிக்காக கடந்த 22-1-2016-ல் அனுப்பப்பட்டுள்ளது.
சத்திரப்பட்டி புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கும் பணிக்கு 13-12-2005-ல் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை 209 அகலப்படுத்தி மேம்பாடு செய்ய இந்த நெடுஞ் சாலை இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையத்திடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. சத்திரப்பட்டி புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
42 கி.மீ. திண்டுக்கல் பழநி புறவழிச் சாலையில் 10 கி.மீ. தூரத் துக்கு சாலை அமைக்கப்பட்டுள் ளது. பழநி பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக இந்தப் பணிகள் விரைவுபடுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் எடப்பாடி பழநிச்சாமி தெரிவித்தார்.