

சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் மதுவிலக்குத் துறை மானிய கோரிக் கையின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின் பேசும்போது, ‘‘அதிமுக தேர் தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பாக அளித்த வாக்குறு தியை நிறைவேற்ற என்ன நட வடிக்கை எடுத்துள்ளீர்கள். திருப் பூரில் பெண்களை அடித்த காவல் துறை அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கூடாது’’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது:
படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதே அதிமுக அரசின் கொள்கை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படி யாக கடைகளை குறைக்க வேண் டும் என்பதே எங்கள் நோக்கம்.
திருப்பூரில் சம்பந்தப்பட்ட கடையை மூடிய பின்னரும், எம்எல்ஏவை பொதுமக்கள் கேரோ செய்தனர். விசாரணையில் வேறு எந்த சம்பவமும் நடக்கவில்லை என் பது தெளிவானது. ஒரு அதிகாரி மீது ஏதேனும் குற்றச்சாட்டு இருந்தால் தான் பதவி உயர்வை நிறுத்த முடியும்.