

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:
‘மாநில நுண்ணறிவுப்பிரிவு ஐஜி.யாக இருந்த அம்ரேஷ் புஜாரி தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உள்நாட்டு விவகார நுண்ணறிவுப் பிரிவு ஐஜியாக இருந்த கண்ணப்பன் மாநில நுண்ணறிவுப் பிரிவு ஐஜியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
திருநெல்வேலி இணை கண் காணிப்பாளராக (சட்டம்-ஒழுங்கு) இருந்த லோகநாதன் தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளராகவும், கமுதி இணை கண்காணிப்பாளராக இருந்த விக்ரம் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளராகவும் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
விழுப்புரம் மாவட்ட கண்காணிப் பாளராக இருந்த மனோகரன் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக இடமாற்றம் செய் யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்ட இணை கண்காணிப்பாளராக (புறநகர்) இருந்த சரோஜ்குமார் தாகூர் திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக இருந்த அபினவ் குமார் நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட கண் காணிப்பாளராக இருந்த பொன்னி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டன்ட் ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டன்ட் ஆக இருந்த மணி சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் சிறப்பு விசா ரணைக் குழு உதவி ஐஜியாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’. இதற் கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளார்.