

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கோடநாடு எஸ்டேட் காவ லாளி கொலை வழக்கு தொடர் பாக விசாரணை இழுபறியாக உள்ளது. காயமடைந்த காவலாளி கிருஷ்ண பகதூர் போலீஸ் காவலில் உள்ளார். அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது. கொலையாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை போலீஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
கிருஷ்ண பகதூர் அளித்த வாக்குமூலத்தில், இரு வாகனங் களில் 10 பேர் வந்ததாக கூறியிருந்தார். அதன் அடிப் படையில் கோடநாடு, டானிங் டன் பகுதிகளில் உள்ள கண் காணிப்புக் கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. வார்விக் பகுதியில் தனியார் எஸ்டேட் டில் கிடைத்த வாகன நம்பர் பிளேட், குல்லா, கையுறைகள் போன்றவை கொள்ளையர்களு டையதா எனவும் விசாரணை நடக்கிறது.
மாவட்டத்தின் நுழைவு வாயில்களான குஞ்சப்பனை, பர்லியாறு, கக்கநல்லா, நாடுகானி சோதனைச் சாவடிகளில் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யிலான வாகனங்கள் வந்து சென் றுள்ளனவா என அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதித்து வருகின்றனர்.
மேலும், வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளுக்கு கொள்ளையர் கள் வந்தார்களா என நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி மேட்டுப் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க்களிலும் விசாரணை நடந்து வருகிறது.
கிருஷ்ண பகதூரை குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதி களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் நேற்று விசாரித்தனர். இந்நிலையில், விசாரணைக்கு அமைக்கப்பட்ட தனிப்படை சென்னை விரைந்துள்ளதாக தெரிகிறது. காவலாளி கொலை வழக்கு விசாரணை தொடர் பாக ரகசியம் காக்கும் காவல் துறையினர் அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் அளிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.