

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி காலமானார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் அ.சுப்பிரமணி அப்பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
இந்நிலையில், கட்சிப் பணி களை சிறப்பாக ஆற்றுவதற்காக தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக கீதா ஜீவன் நியமிக்கப்படுகிறார். திருச்செந் தூர், திருவைகுண்டம், ஒட்டப் பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் அடங்கிய தூத்துக் குடி தெற்கு மாவட்ட பொறுப் பாளராக அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ நியமிக் கப்படுகிறார்.
ஏற்ககெவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தூத்துக் குடி வடக்கு, தெற்கு மாவட்டங் களுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், திமுக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாள ராக அ.சுப்பிரமணி நியமிக்கப்படு கிறார். இவ்வாறு அறிக்கையில் அன்பழகன் கூறியுள்ளார்.