நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்: தமிழகத்தில் 32 ஆயிரம் பேர் கைது

நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்: தமிழகத்தில் 32 ஆயிரம் பேர் கைது
Updated on
2 min read

போக்குவரத்து பாதிக்கப்படவில்லை; வங்கி பணிகள் முடங்கின

நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. போராட்டத் தில் ஈடுபட்ட சுமார் 32 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும், புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை திரும் பப் பெற வேண்டும், தொழி லாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பொதுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

தமிழ்நாட்டில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உட்பட 11 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட் டத்தின்போது சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் மாநிலம் முழுவதும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். உடனுக் குடன் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தியதால் போக்குவ ரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்ப டவில்லை. தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் பரவலாக போராட்டத்தில் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. தமிழ்நாட்டின் சில இடங்களைத் தவிர பெரும் பாலான ஊர்களில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன.

மத்திய அரசு ஊழி யர்கள் பெருமளவு போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங் கள், தபால், பிஎஸ்என்எல் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மாநில அரசு ஊழியர்களிலும் குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வராததால், அந்த வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

வங்கிப் பணிகள் பாதிப்பு

வங்கி ஊழியர் தொழிற்சங் கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், “கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத் தில் நாடு முழுவதும் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். இந்தியா முழுவதும் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்பிலான 26 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் தேங்கின. பல்வேறு இடங்களில் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை” என்றார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளன (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறும்போது, ‘‘போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்” என்றார்.

இந்த போராட்டத்தின்போது சென்னையில் பல்வேறு இடங்க ளில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 3,043 தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத் தில் 883 பேரும், திருவள்ளூரில் 589 பேரும் கைதாயினர். கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங் களில் 4,072 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 4,355 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 32 ஆயிரம் தொழிலாளர்கள் கைது செய்யப் பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in