

கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சக் கண்டி உள்ளிட்ட 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் ஒப்பந்தத் தின் அடிப்படையில், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், தடுப் பணைகளை கேரள அரசு கட்டத் தொடங்கியிருப்பதாக தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், தடுப்பணை களைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், கட்டுமானப் பணி களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழக - கேரள எல்லையான கோவை மாவட்டத்தின் ஆனைக்கட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, தமாகா, தபெதிக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு ஜனநாயகக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு கள் இயக்கம், தமிழக விவசாயிகள் சங்கம், பசுமை இயக் கம், காந்திய மக்கள் இயக்கம், ஓசை அமைப்பு, கொங்கு இளை ஞர் பேரவை, முருகசேனா, தமிழ் புலிகள், பவானி பாசன விவசாயி கள் சங்கம் ஆகியவை பங்கேற்றன.
தடுப்பணை கட்டுமானப் பணி களை தடுத்து நிறுத்தப்போவதாகக் கூறி போராட்டக் குழுவினர் கேரள எல்லையில் நுழைய முயன்றனர். அவர்களை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை யடுத்து 37 பெண்கள் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ‘‘போராட்டத்தை யொட்டி தமிழக எல்லையில் சுமார் 800 போலீஸார் பாதுகாப் புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
தடுப்பணைகள் கட்டுவதைக் கண்டித்து, தமிழக - கேரள எல்லையான ஆனைக்கட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர்