வானம் தெளிவாக இருப்பதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு: கரூர் பரமத்தியில் 34 டிகிரி செல்சியஸ் பதிவு

வானம் தெளிவாக இருப்பதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிப்பு: கரூர் பரமத்தியில் 34 டிகிரி செல்சியஸ் பதிவு
Updated on
1 min read

தமிழகத்தில் வானம் மேகமூட்ட மின்றி தெளிவாக காணப்படுவதால் பல்வேறு நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வானம் தெளி வாக காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு நகரங் களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கரூர் பரமத்தி யில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகி யுள்ளது. கன்னியாகுமரியில் 33 டிகிரி, மதுரையில் 32 டிகிரி, கோவை, பாளையங்கோட்டை, பரங்கிப் பேட்டை, திருச்சி ஆகிய நகரங் களில் தலா 31 டிகிரி, சென்னை, தஞ்சாவூர், பாம்பன், புதுச்சேரி ஆகிய நகரங்களில் தலா 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே இந்த அளவுக்கு வெப்பம் அதிகரிப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதிக்கு அருகே எந்த காற்றழுத்தமோ, வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ இல்லை. அதனால் தமிழக வான் பகுதியில் மேகக் கூட்டங்கள் உருவாகாமல் தெளிவாக காட்சியளிக்கிறது. இதனால் சூரியனிடமிருந்து வரும் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியைத் தாக்குகிறது.

இதனால் நிலப் பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மேகக் கூட்டங்கள் இருந்தால், அவை வெப்பக் கதிர்களைத் தடுத்து, நிலப் பகுதியில் குளிர்ச் சியை ஏற்படுத்தும். தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். சென்னை யில் வானம் தெளிவாக காணப் படும்.

தாய்லாந்து அருகே நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தமிழகம் நோக்கி வர வாய்ப் பில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in