ஓய்வூதியம் வழங்கக் கோரி போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் போராட்டம்

ஓய்வூதியம் வழங்கக் கோரி போக்குவரத்து கழக முன்னாள் ஊழியர்கள் போராட்டம்
Updated on
2 min read

போக்குவரத்து கழகத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்று கூறி பல்லவன் இல்லத்தின் முன்னாள் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களைக் கூட வாங்க இயலாமல் அவதியுறுவதாக ஓய்வுபெற்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை, பல்லவன் இல்லத்தில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அங்கு பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் புகைப்படப் பதிவுகள்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in