

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தடுப் பணைகள் கட்டுவதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசைக் கண் டித்து சென்னை மற்றும் தருமபுரி யில் வரும் 23-ம் தேதி ஆர்ப்பாட் டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த சில மாதங் களாக ஆட்சியில் மாற்றங்களும், நிச்சயமற்ற தன்மையும் நிலவி வரு கின்றன. இதனைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் காவிரியின் குறுக்கே கர்நாடகமும், பாலாற்றின் குறுக்கே ஆந்திரமும், பாம்பாற்றின் குறுக்கே கேரளமும் தடுப்பணை கள் கட்டும் பணிகளை தொடங்கி யுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அண்டை மாநிலங்கள் தடுப் பணைகள் கட்டுவதை நிறுத்தக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத் துக் கட்சிகளும், விவசாய அமைப்பு களும் குரல் எழுப்பினாலும் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாஜக அரசு கண்டும் காணாமல் இருக்கிறது. இதனைக் கண்டித்து வரும் 23-ம் தேதி சென்னை, தருமபுரியில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.