

மயிலாப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி அப்பகுதியினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் தெப்பக்குள பேருந்து நிறுத்தம் எதிரே மற்றும் மயிலாப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை களால் பொதுமக்கள், பணிக்கு செல்பவர்கள், மாணவிகள் அதி கம் பாதிக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. இக்கடை களை நிரந்தரமாக மூட வேண் டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அப் பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால், டாஸ்மாக் கடைகள் அப்புறப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த 2 டாஸ் மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தி மயிலாப்பூரில் உள்ள பல்லக்கு மாநகர், கபாலி தோட்டம் பகுதி யைச் சேர்ந்த மக்கள் லஸ் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று காலை தொடங்கினர். இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினரும் இதில் கலந்துகொண்டனர்.
தகவல் கிடைத்து வந்த மயி லாப்பூர் போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50 பேரை கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.