

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது.
கோவை நகரில் ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை காரணமாக, பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): பீளமேடு 19.80, மேட்டுப்பாளையம் 1.40, பொள்ளாச்சி 4, பெரியநாயக்கன்பாளையம் 4, வேளாண் பல்கலைக்கழகம் 6.30, சின்கோனா 18, சின்னக்கல்லார் 2, வால்பாறை பி.ஏ.பி. 8, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 9, கோவை தெற்கு 20. மாவட்டம் முழுவதும் மொத்தம் 92.50 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.