

குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினருக்கு வீட்டுவசதி அதிக அளவில் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வீடுகளைக் கட்டி வருகிறது.
குறைந்த வருவாய் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு அவர்களது வாங்கும் திறனுக்கேற்ப போதிய வீட்டுவசதி கிடைக்கச் செய்ய தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மைக் கழகம் மூலம் வீட்டுவசதி நிதியத்தை செயல்முறைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தனியார் முதலீட்டையும் அதிக அளவில் ஈர்த்து, குறைந்த வருவாய் பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வீடுகளை அதிக அளவில் கட்டி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும். இந்த முயற்சியில் பங்குகொள்ள தேசிய வீட்டுவசதி வங்கியும் ஒப்புக்கொண்டுள்ளது.
3,300 புதிய குடியிருப்புகள்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ரூ.3,707 கோடி மதிப்பீட்டில் ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் 22,178 குடியிருப்பு பணிகள் 2017-18ல் முடிக்கப்படும். தவிர, ரூ.808 கோடி செலவில் 3,300 புதிய குடியிருப்புகளும் கட்டப்படும்.