

பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்த அமித்ஷா, அங்கு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இரவு புதுச்சேரியில் தங்கிய அவர், இன்று காலை 9.30 மணி அளவில் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபடும் அவர், இன்று பிற்பகலில் சென்னை வந்து, விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னை வரும் அவர், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் நேராக மீனம்பாக்கம் விமான நிலையம் செல்ல இருப்பதாக தமிழக பாஜக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். விமான நிலையத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகளை அவர் சந்தித்துப் பேசக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.