

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப்பணி யிடங்கள் நிரப்பப்படும் என்று பள்ளிக் கல் வித்துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் தெரிவித்தார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக் கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், ஒழுக்கத்தை நிலைநாட்ட வும் நற்பண்புகள் கொண்ட கல்வி வழங்கப்பட உள்ளது. இதற்காக அந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரி யர்களுக்கு 60 வகையான நற்பண்புகள் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான 2 நாள் பயிற்சி, சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சிக் கையேட்டை வழங்கினார்.
விழா முடிவடைந்த பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியதாவது
ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 30 ஆயிரம் பேர் உள்ளனர். இப்போது அரசுப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை கணக்கெடுத்து வருகிறோம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். உடனடியாக தகுதித்தேர்வு நடத்தும் அளவுக்கு தற்போது காலியிடங்கள் இல்லை.