Published : 20 Sep 2018 08:25 AM
Last Updated : 20 Sep 2018 08:25 AM

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு

சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்தால் மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கும் தொகையில் சுமார் 50 சதவீதத்தைக் குறைக்க முடியும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பெரம்பலூருக்கு நேற்று வந்த ஆளுநர், பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட செங்கு ணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நட்ட அவர், மாணவர்களுக்கு வழங்குவதற்காக சமைத்து வைக்கப்பட்டி ருந்த மதிய உணவை ருசி பார்த்ததுடன், அதன் தரத்தை ஆய்வு செய்தார்.

பின்னர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு இணை உணவு வழங்கினார்.அப்பகுதி மக்களைப் பார்த்து, பெரம்பலூர் நகராட்சி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பெரம்பலூரில் நடைபெற்ற புகைப் படக் கண்காட்சி திறப்பு விழா, தூய்மை பாரத ரதம் தொடக்க விழா, தூய்மைக் காவலர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

தூய்மை பாரத ரதத்தை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். தூய்மை பாரத இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டிய ஆளுநர், தூய்மைக் காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார். பின்னர், ஆளுநரின் தலைமை யில் அனைவரும் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன் வாரிலால் புரோஹித், "சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் மூலம் காலரா, மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு தொற்று நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும். இதனால் நமது மருத்துவ சிகிச்சைக்கான செலவில் 50 சதவீதத்தைக் குறைக்க முடியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x