Published : 24 Sep 2018 09:18 AM
Last Updated : 24 Sep 2018 09:18 AM

கருணாஸை கைது செய்யும்போது எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்?- தமிழக அரசுக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம்

அவதூறாக பேசிய கருணாஸை கைது செய்யும் போது எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன் என்று தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவதூறாக பேசியதாக கருணாஸ் எம்எல்ஏ நேற்று காலை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்: கருணாஸ் மீது சட்டம் கடமையை செய்யும் போது எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றவர்ளை சட்டம் சலுகை தந்து பாதுகாப்பது ஏன். பாஜகவை எதிர்த்தால் கைது, ஆதரித்தால் சட்டம் கண்ணை மூடி கொள்ளுமா, காவல்துறையின் ஒரு தலைப் பட்சமான நடவடிக்கையை கண் டிக்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கருணாஸ் பேசியது விமர்சனத்துக்குரியது. அதேசமயம் காவல்துறை அதி காரிகள் முன்னிலையில் காவல் துறையையும் நீதிமன்றத்தையும் மிக இழிவாகவும் அவதூறாக வும் பேசிய எச்.ராஜா காவல்துறை பாதுகாப்புடன் பொதுநிகழ்ச்சி களில் பங்கெடுத்து வருகிறார். இந்த அணுகுமுறையை வன்மை யாக கண்டிப்பதோடு எச். ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜய காந்த்: சமீப காலமாக காவல் துறையை தாக்குவதும் நீதி மன்றத்தை அவமதித்து பேசுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக் கிறது. தங்களுக்கு வேண்டியவர் கள் தவறு செய்தால் கண்டுக் கொள்ளாமல் இருந்து கொண்டு, மற்றொருபுறம் அச்சுறுத்தல்களுக் காக கைது செய்யப்படுகிறது. ஒரு கண்ணில் சுண்ணாம்பும் மறு கண்ணில் வெண்ணை வைத்து பார்க்கும் தமிழக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் திருமாவளவன்: அண்மையில் நீதித்துறை, காவல் துறையை எச்.ராஜா கேவலமாக பேசியிருந்தார். எச்.ராஜாவை கைது செய்யாமல் தயக்கம் காட்டுவது முதல்வர் மீதான நன்மதிப்பை நீர்த்து போக செய்யும். அவர் தொடர்ந்து பேசி வரும் கருத்துகள் முதல்வருக்கு சவால் விடும் வகையில் உள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்: கருணாஸ் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரை காவல்துறை கைது செய்துள்ளது. எச்.ராஜா காவல்துறையினரை நேரடியாக பணி செய்ய விடாமலும், நீதி மன்றத்தை இழிவான வார்த்தையை பயன்படுத்தியும் பேசினார். அவர் மீது வழக்கு பதியாமல் அமைதி யாக உள்ளனர். கருணாஸுக்கு ஒரு நீதி, எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?

இவ்வாறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x