Published : 28 Sep 2018 08:00 AM
Last Updated : 28 Sep 2018 08:00 AM

முதல்வரின் பாதுகாப்பில் குளறுபடி: வேலூர் டிஎஸ்பி உட்பட 44 போலீஸாருக்கு ‘மெமோ’

தமிழக முதல்வருக்கான பாதுகாப் புப் பணியில் குளறுபடி ஏற்பட்ட தற்கு விளக்கம் கேட்டு வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஎஸ்பி உள்ளிட்ட 44 போலீஸாருக்கு நோட் டீஸ் (மெமோ) அளிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல் துறையினர் மத்தி யில் சலசலப்பை ஏற்படுத்தியுள் ளது.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடந்த 25-ம் தேதி காலை திருப்பதி யில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் காரில் வேலூர் வழியாக சேலத்துக்கு சென்றார். அப்போது, வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

முண்டியடித்த தொண்டர்கள்

தொடர்ந்து, காட்பாடி சில்க்மில் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்க ஏற் பாடு செய்யப்பட்டது. அங்கு, எதிர் பார்த்த அளவைவிட அதிகமான தொண்டர்கள் குவிந்தனர். தொண் டர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி னர். முதல்வரின் கார் வந்ததும் முண்டியத்துச் சென்ற தொண்டர் களால் முதல்வருக்கான பாது காப்பில் குளறுபடி ஏற்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சில்க்மில் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க (மெமோ) வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் உத்தரவிட்டார். அதன்படி, காட்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலெக்ஸ், 3 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 40 போலீஸார் என 44 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சில்க் மில் பேருந்து நிறுத்தப் பகுதி யில் முதலமைச்சரின் பாதுகாப் புப் பணியில் இருந்த அதிகாரி கள் அன்றைய தினம் சற்று கவனக்குறைவாக இருந்து விட்ட னர். இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தில் திருப்தி இல்லா விட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று தெரிவித் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x