Published : 26 Sep 2018 09:05 AM
Last Updated : 26 Sep 2018 09:05 AM

பெரியார் பட்டம் கொடுத்த தலித் பெண் ஆளுமை

தி க நடத்திய பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் க.அன்பழகன், சங்கரய்யா, ஆர்.நல்லகண்ணு மூவரும் கி.வீரமணியால் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் நல்லகண்ணுவின் பேச்சு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. “பெரியார் என்று முதன்முதலில் அவரை அழைத்தது ஒரு தலித் பெண்” என்றார் நல்லகண்ணு.

1938-ல் சென்னையில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் நடந்தது அது. நல்லகண்ணு குறிப்பிட்ட அந்தப் பெண்: மீனாம்பாள் சிவராஜ். தலித் தலைவரான சிவராஜின் மனைவி.

மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் கூடி முடிவெடுத்துக் கொடுத்தபட்டம் அது. கூடவே, நல்லகண்ணு ஏ.எஸ்.கே.ஐயங்காரையும் நினைவுகூர்ந்தார். பெரியாரியத்தில் பெரும் நம்பிக்கைகொண்டிருந்த ஏ.எஸ்.கே.ஐயங்கார், சாதி ஒழிப்புப் பயணத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ‘பகுத்தறிவுச் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா.’ எனும் நூலையும் அவர் எழுதியிருக்கிறார்.

சாதி மறுப்பின் ஒரு பகுதியாகத் தன்னுடைய பெயரிலிருந்த ‘ஐயங்கார்’ பட்டத்தை வெட்டிவிட முடிவெடுத்தார் ஏ.எஸ்.கே. இதை அவர் பெரியாரிடம் சொன்னபோது பெரியார் “வேண்டாம்” என்று கூறிவிட்டார். ஏன்? பிராமணியத்துக்கு எதிராகத் தன்னுடைய சாதி அடையாளத்துடனேயே பேசும்போது அதற்கான விளைவு அதிகமாக இருக்கும் என்று பெரியார் கருதியதே இதற்கான காரணம். சுயசாதி விமர்சனம் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பெரிய தேவை என்பதைச் சொல்லாமல் சொல்வதுபோல இருந்தது நல்லகண்ணுவின் பேச்சு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x