

‘கவின் கேர்’ நிறுவனங்களுக்கு சொந்தமான 22 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இந்நிறுவன தலைமை அலுவலகம், அமைந்தகரையில் உள்ள அலுவலகம் உட்பட 12 இடங்களிலும், கோவை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் ‘கவின்கேர்’ நிறுவனம் தொடர்புடைய 8 இடங்களிலும் சோதனை நடந்தது. மேலும், டெல்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. மொத்தம் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட சோதனை இரவு வரை நீடித்தது. முடிவில் பல ஆவணங்களை எடுத்து அட்டைப் பெட்டிகளில் வைத்து பாதுகாப்பாக அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
இந்நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாக வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்துள்ளது என்று ரகசிய புகார் வந்ததை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளில் இறங்கியதாக கூறப்படுகிறது.