Last Updated : 21 Sep, 2018 10:01 AM

 

Published : 21 Sep 2018 10:01 AM
Last Updated : 21 Sep 2018 10:01 AM

பத்திரப்பதிவு அலுவலகங்களின் வெளியிலும் கேமரா மூலம் கண்காணிப்பு: பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தகவல்

தமிழகத்தில் உள்ள 575 பத்திரப் பதிவு அலுவலகங்களில் வெளி நிகழ்வுகளையும் கண்காணிக்கும் வகையில், கேமராக்கள் பொருத்து வதற்கான ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையில் கணினி பயன்பாடு அறி முகப்படுத்தப்பட்ட நிலையில், இணையவழி பதிவு அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்காக ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் தயாரிக் கப்பட்டு, முதலில் பரீட்சார்த்த முறையில் சில சார்பதிவாளர் அலு வலகங்களில் செயல்படுத்தப் பட்டது. அதன்பின், இந்தாண்டு பிப்ரவரியில் தமிழகம் முழுவதும் உள்ள 575 சார்பதிவாளர் அலுவல கங்களிலும் அறிமுகப்படுத்தப் பட்டது. தொடர்ந்து, இதில் பல் வேறு மாற்றங்கள் செய்யப் பட்டு, புதிய வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஆள் மாறாட்டத்தைத் தடுக்க..

முன்னதாக,பதிவின்போது ஆள்மாறாட்டத்தை தடுக்க, கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதிவு அலுவலகத்திலேயே புகைப் படம் எடுத்தல், பதிவு நிகழ்வு களை ‘சிடி’யாக அளித்தல் போன்ற வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டன. அதன்பின், பல்வேறு காரணங்களால் பதிவு நிகழ்வு கள் ஆவணதாரர்களுக்கு வழங்கப் படுவதில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் இத்திட்டத்தை தொடங்க பதிவுத்துறை முடி வெடுத்துள்ளது. அத்துடன், பதிவு அலுவலகங்களில் இடைத்தரகர் கள் நடமாட்டம் மற்றும் வெளி நிகழ்வுகளை கண்காணிக்கவும் முடிவெடுத்துள்ளது. இதற் கான புதிய ஒப்பந்தம் கோரப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு பதிவு நிகழ்வுகளை சிடியாக வழங்கும் தி்ட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக பதிவுக் கட்டணத்துடன் ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. எல்காட் நிறுவனத்தால், கேமரா, இயக்குபவர் என தனித்தனியான ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருந்தன. இரு வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்ட சேவைகளில், பல்வேறு சிக்கல்கள் உருவா கின. இதனால், சொத்து உரிமை யாளர், வாங்குபவர் புகைப்படங் கள் எடுக்கப்பட்ட போதிலும், பதிவு நிகழ்வை சம்பந்தப் பட்டவர்களுக்கு வழங்க முடிய வில்லை. 2016-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்படாமல் முடங்கியிருந்தது.

புதிய ஒப்பந்தம்

இந்நிலையில், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முடி வெடுத்தோம். எல்காட் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சேவை நிறுத்தப்பட்டு, புதிய ஒப்பந்தம் தற்போது கோரப் பட்டுள்ளது. இதில், கேமரா விநியோகம், பொருத்துதல், இயக்குபவர், பதிவு செய்யப்படாத டிவிடி என அனைத்தையும் ஒரே நிறுவனம்தான் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் விதிகள் மாற்றி அமைக்கப்பட்டு, எல்காட் நிறுவனம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

2 கேமராக்கள்

இப்புதிய ஒப்பந்தப்படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் 2 கேமராக்கள் நிறுவ வேண்டும். ஒன்று, பதிவு நிகழ்வை கண் காணிக்கவும், மற்றொன்று பதிவு அலுவலகத்தின் வெளியில், உள்ளே வருபவர்கள், வெளி நிகழ்வுகளை கண்காணிக்கும் வகையிலும் பொருத்த வேண் டும். இதன் மூலம், பதிவு அலு வலகத்தில் நடக்கும் நிகழ்வு களை பதிவுத்துறை தலைவர், துணைத்தலைவர் அலுவலகங் களில் இருந்தபடியே கண்கா ணிக்க முடியும். வெளியாட்கள் தேவையில்லாமல் உள்ளே வருவதையும் தடுக்க முடியும். பொதுமக்களிடம் வசூலிக்கப்படும் ரூ.50 தொகைக்கு, பதிவு நிகழ் வையும் சிடியில் வழங்கிவிட முடி யும். 3 மாதங்களில் ஒப்பந்தப் பணிகள் முடிக்கப்பட்டு டிசம்பர் இறுதியில் கண்காணிப்பு கேம ராக்கள் செயல்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x