Published : 23 Sep 2018 10:00 AM
Last Updated : 23 Sep 2018 10:00 AM

திரைப்படப் பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கிவிட்டு சாட்சியை குற்றவாளியாக்கியதால் ஆயுள் தண்டனை ரத்து: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் 

சினிமா பாணியில் குற்றவாளியை சாட்சியாக்கிவிட்டு, சாட்சியை குற்றவாளியாக்கி வழக்கில் சேர்த்த தால் அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை குமரன் நகர் பகுதியில் காட்டுராஜா என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த தம்பதி ராஜேந்திரன் மீனாட்சி. இதில் மீனாட்சிக்கு பார்வை குறைபாடு உள்ளது. மீனாட்சிக்கும் காட்டுராஜாவின் மனைவிக்குமிடையே வீட்டை காலி செய்வதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நள்ளிரவில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த மீனாட்சி யின் 6 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே காம்பவுண்டில் வசித்து வந்த கூலித்தொழிலாளியான ஐயப்பன் மீது கடந்த 2009-ல் வழக்குப் பதியப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதி மன்றம் கடந்த மே மாதம் ஐயப் பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்பன் சென்னை உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், “வீட்டின் உரிமையாளரான காட்டுராஜாதான் உண்மையான குற்றவாளி. ஆனால் இந்த வழக்கில் போலீஸார் அவரை தப்பிக்க வைத்துவிட்டு, அப்பாவியான என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் எனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.ராமதிலகம் ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித் தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் போலீஸார் இயந்திரத் தனமாக செயல்பட்டுள்ளனர். ‘வழக்கு எண் 18/9’ என்ற சினிமா பாணியில் குற்றவாளியை சாட்சி யாக்கிவிட்டு, சாட்சியாக சேர்க்கப் பட்டவரை குற்றவாளியாக்கி ஆயுள் தண்டனையையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதற்காக சம்பந்தப்பட்ட குமரன் நகர் போலீஸாருக்கும் விசா ரணை அதிகாரிக்கும் இந்த நீதி மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி 3 மாதங் களுக்குப் பிறகே இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் வீட்டு உரிமையாளரான காட்டுராஜாதான் தன்னை கடத் திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த வாக்குமூலத்தை விசாரணை நீதி மன்றமும் கவனத்தில் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது.

3 மாதத்தில் முடிவு

எனவே, மனுதாரரான ஐயப் பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதேபோல இந்த வழக்கில் குற்றத்தை செய்து விட்டு தப்பிய உண்மையான குற்றவாளியான காட்டுராஜா மீதான வழக்கை மகளிர் நீதிமன்றம் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x