Published : 27 Sep 2014 09:48 AM
Last Updated : 27 Sep 2014 09:48 AM

தொடர் விடுமுறையா?: வங்கி அதிகாரிகள் விளக்கம்

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதாக வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ‘‘வரும் 29-ம் தேதி தொடங்கி அக்டோபர் 7-ம் தேதி வரையிலான நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை. எனவே, வங்கிப் பரி வர்த்தனைகளை 29-ம் தேதிக்குள் முடித்துக்கொள்ளுங்கள்’’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து கேட்டதற்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் மற்றும் வங்கிகளின் அதிகாரிகள் கூறியதாவது:

தொடர் விடுமுறை என்பது தவறான தகவல். காந்தி ஜெயந்தி (அக்.2), தசரா (அக்.3) என 2 நாட்களுக்கு மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியன்று தூய்மை தினம் அனுசரிக்க மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்டோபர் 4-ம் தேதி சனிக்கிழமை வழக்கம்போல வங்கிகள் இயங்கும். 5-ம் தேதி ஞாயிறு விடுமுறை. 6-ம் தேதி (பக்ரீத்) விடுமுறை இல்லை. வங்கிகள் செயல்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x